Poojaaham  

   



விதிகளும் நிபந்தனைகளும்

1.    50 வயதிற்கு மேற்பட்ட முதியோர் சதாரணமாகவே அனுமதிக்கப்படுவர்.
2.    நல்ல ஆரோக்கியம் உள்ள முதியோர் சாதாரணமாகவே அனுமதிக்கப்படுவர். அவர்கள் கழுவுதல், துப்பரவு செய்தல், மற்றும் அடிப்படைத் தேவைகளை தாமே செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
3.    வயது வந்த இருபாலாரும் அனுமதிக்கப்படுவர்.
4.    உறவினர்கள், முதியோர்களை எந்நேரமும் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். ஆயினும் அவர்களுடைய அறையில் தங்கி இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
5.    அகத்தில் வதிவோரின் பிள்ளைகள், அல்லது நெருங்கிய உறவினர்கள் வெளிநாடுகள், அல்லது வேறு நகரத்தைச் சேர்ந்தவர்களாயின் நிர்வாகத்தின் எழுத்து மூலமான அனுமதியின் அடிப்படையில் பூஜா அகத்தில் தங்கலாம்.
6.    பூஜா அகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையிலும், விண்ணப்பப்படிவத்தில் குறித்துரைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையிலும் நிர்வாகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க இரண்டு உத்தரவாதிகளின் பெயர்களை வதிவோர் அனைவரும் வழங்குதல் வேண்டும்.
7.    ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஓர் உத்தரவாதிக்கு ஏதேனும் நடந்துவிட்டால் (ஊனம் ஏற்படல், இறப்பு ஏற்படல்) உடனடியாக அதுபற்றி நிர்வாகத்திற்கு வதிவாளர் அறிவிப்பதுடன் முடிந்த விரைவில் இரண்டாவது உத்தரவாதியை அவர் தெரிவித்தல் வேண்டும்.
8.    வதிவாளருக்கு ஓர் உத்தரவாதி மட்டும் இருப்பின் அவ்வுத்தரவாதியின் வாழ்க்கைத்துணை, இரண்டாவது உத்தரவாதியாக ஏற்றுக் கொள்ளப்படலாம்.
9.    கட்டடத்தின் உள்ளே புகைத்தல், கண்டிப்பாக விலக்கப்பட்டுள்ளது. (மைதானத்தில் அல்லது திறந்த வெளியில் புகைத்தல், அனுமதிக்கப்படலாம்)
10.    'பூஜா அகத்தின்' ஆள்ப்புலத்துள் மதுசாரம், மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது கண்டிப்பாக விலக்கப்பட்டுள்ளது.
11.    ஒவ்வொரு அறையிலும் இருவர் இருப்பதற்கு நிர்வாகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
12.    வதிவாளர் எந்நேரமும் தனக்கு உதவியாளர் தேவையென தெரிவிக்குமிடத்து சில நிபந்தனைகளின் பேரில் நிர்வாகம் அவ்வாறு ஒழுங்கு செய்யும்.
13.    வதிவாளருக்கு ஓர் உதவியாளர் தேவையெனில் அவர் அவ்வாறான ஓர் உதவியாளரை தனது சொந்த ஏற்பாட்டில் பெற்றுக் கொள்வதற்கும், அதே அறையில் அவர் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.
அறைக் கட்டணம் மற்றும் உணவு தொடர்பான செலவு என்பன மேலதிகமாக சேர்க்கப்படும்.
14.    பின்வரும் சூழ்நிலையின் அடிப்படையில் தொலைக்காட்சி, குளிரூட்டி, கணனி, சிறு குளிரூட்டல் சாதனம், என்பன   
15.    அனுமதிக்கப்படும் .
16.    ஓர் அறையின் வதிவாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது ஆட்சேபனை தெரிவிக்காதவர்களாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறான சூழ்நிலையில் அந்த அறையில் உள்ள குறித்த சாதனங்களுக்காக ஏற்படும் மின்னழகுக்கட்டணம் தொடர்பில் ஒரு உப மின்மானி நிர்வாகத்தினால் வழங்கப்படுவதுடள் அவ்வாறு  மேலதிகமான மின்மானிக்கான மற்றும் மின்கட்டணத்திற்கான செலவினை வதிவாளர் செலுத்துதல் வேண்டும். அவ்வாறான சாதனங்கள் பொருத்துவதற்கான செலவை குறித்த வதிவாளர்களே பொறுத்துக் கொள்ளல் வேண்டும்.
அவ்வாறு உபமின்மானியைப் பொறுத்துவது நிர்வாகத்திற்கு இயலாத ஒன்றாகக் காணப்படுமிடத்து நிர்வாகமானது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவினைத் தீர்மானித்து அதற்காக வதிவாளரிடமிருந்து மேலதிகக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும்
குறிப்பு:
     எமது சேவைகள் யாவும் பூஜா அக வளாகத்திற்குள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். சுகவீனம் மற்றும் வேறு காரணங்களுக்காக வெளியில் செல்ல,தங்க நேரிட்டால் அதற்கான பொறுப்புகள் எதையும் பூஜா அகம் பொறுப்பேற்காது.

உணவு:-
வழங்கப்படும் உணவானது ஒவ்வொரு வதிவாளரினதும், ஆரோக்கியம், மற்றும் பழக்கவழக்கம் என்பவற்றிற்கும் தகுதி வாய்ந்த உணவு வகைப்படுத்துனரின் ஆலோசனைக்கும் அமைவானதாக இருக்கும். வழங்கப்படும் உணவானது எப்போதும் வதிவாளருடைய தெரிவினையும் உள்ளடக்குவதாக இருப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.
தரம் வாய்ந்த உணவு அட்டவனை:-
6.00 - 6.30 : தேனீர், கோப்பி, அல்லது சூடான பால்.
7.30 - 8.30 காலை உணவானது பின்வரும் வகைப்படுத்தலுக்கு ஏற்றதாக இருக்கும்.
            பாணுடன் வெண்ணெய் , ஜாம், முட்டை
            பால், பலதரப்பட்ட கோண்விளேக் (உழசகெடயப in னகைகநசநவெ எநசவைல )
            இட்டலி, தோசை, பட்டானிக்கடலை
            பொங்கல், பால்சோறு ,அப்பம், கஞ்சி
                        மற்றும்
கோப்பி,தேனீர்,தோடம்பழரசம்,
10.00 – 10.30        பருவகாலப் பழங்கள்
                        மற்றும்
                   கோப்பி, தேனீர், லசி, இளனீர்
12.00    - 13.00        பின்வரும் வகைப்படுத்தலோடு கூடிய மதிய உணவு சிறந்த
            வகையான சோறு 3 வித்தியாசமான மரக்கறி, இறைச்சி
            (மாட்டிறைச்சி, மற்றும் பண்டிறைச்சி தவிர்ந்த)
            மீன், முட்டைக்கறி மற்றும் பொரியல் , தயிர்;, பாயாசம்
                          மற்றும்
                   பழப்பாகு, வாழைப்பழம், பருவகாலப்பழம்.

15.00    - 15.30        சிற்றுண்டிகள்
            வடை, ஸ்வீட்(ளறநநவ),நொறுக்குத்தீன்
            மற்றும்
            கோப்பி, தேனீர்

18.00 – 19.30        பின்வரும் வகைப்படுத்தலுக்கு ஏற்ப இரவு உணவு சிறந்த வகையான
               பாண்;, பலதரப்பட்ட சூப்வகைகள் (ளழரிள in னகைகநசநவெ எநசவைல )
            பிட்டு, இடியப்பம், உப்புமா, ரொட்டி, சப்பாத்தி, நூடில்ஸ்(ழௌனடநள)

21.0 - 22.00    படுக்கை நேரம்
            சூடான பால், ஊட்டச்சத்து ,

குறிப்பு

பண்டிகை நாட்கள், பிறந்த நாட்கள் மற்றும் வதிவாளர்களின் விசேட நாட்களின்போது விசேடமான மெனுவிற்கேற்ப உணவு பரிமாற்றப்படும்.
 


 
வழமையான உணவு, மற்றும் தங்கும் இடம் தவிர்ந்த ஏனையவை.
1.    படுக்கை அமைத்தல்
2.    தூசு தட்டுதலும், கூட்டுதலும்,
3.    குளியல் அறை துப்பரவு செய்தலும், துடைத்தலும்
4.    வதிவாளர்கள் பற்றி முழுநேரமும் இரண்டு கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பர்.
வெந்நீர் குடுவையில் தண்ணீர் வழங்கும் அறை.
5.    வதிவாளர்கள் சுகயீனமுற்றோ, முடியாத நிலையிலோ இருக்கும் போது மட்டும் உணவு அறைச்சேவை மூலம் வழங்கப்படும்.
6.    செய்தித் தாள்களும், சஞ்சிகைகளும்
7.    இணையம் மற்றும் தொலைபேசி வசதி
8.    வெளிநாடுகளில் வாழும் உறவுகளுடன் முகம் பார்த்துப் இலவசமாகப் பேசும் தொலைபேசி வசதி
9.    ஒவ்;வொரு வெள்ளிக்கிழமையும், கோவிலுக்கோ (பத்திரகாளி கோவில், கோணேசர் கோவில்) பள்ளிவாசலுக்கோ கூட்டிச் செல்லுதல்.
10.    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவ ஆலயத்திற்குச் செல்லல்.
11.    வார முடிவு நாளில் கடற்கரைக்குச் செல்லல்.
12.    வென்னீர் கிணற்றுக்குச் செல்லல் (கன்னியா)
13.    சுற்றுலா செல்லல்

 பின்வரும் தனிப்பட்ட சேவைகள்.
நகம் வெட்டுதல்.
தலைமயிர் சீவுதல்.
ஒழுங்காக மருந்துகளை உட்கொள்வது பற்றி கண்காணித்தல்.
சவரம் செய்தல்.
சிகை அலங்காரம் ( தகுதி வாய்ந்த நபரை நிர்வாகம் ஒழுங்கு செய்யும்.)

குறிப்பு

வெளியில் அழைத்துச் செல்லல் என்பது கால நிலையிலும், நகரின் இயல்பு நிலையிலும்  தங்கியிருக்கும்.















ஏற்படும் செலவு
                        நிர்வாகத்தில் அங்கீகாரத்திற்கேற்ப 'பூஜா அகத்தில்' அனுமதி கோரும் தனிநபர் குறித்த
'பூஜா அகத்தில்' வதிவாளராக தங்குவதற்கு முன்னதாக பின்வரும் நிதிசார் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என   தேவைப்படுத்தபடுகின்றனர்.
1.    உணவு, சேவை, சௌகரியங்கள், வசதிகள், பராமரிப்பு மற்றும் ஏனைய செலவுகளுக்காக, ஏற்புடையவிடத்தில் பின்வரும் தொகையை செலுத்துதல்  வேண்டும்.
      ஒருவருக்கான மாதாந்தக் கட்டணம் 35000 ரூபாய்கள் அல்லது 250 ளுகச (ளுறளைள கசயமெ)
      இக்கட்டணமானது வதிவாளரின் அல்லது அவரின் பொறுப்பாளரின் நிதி நிலைமைகளிற்பேற்ப மாறுபடலாம்
      குறித்த தொகையானது ஆங்கில கலண்டரின் 5ம் திகதிற்கு முன் செலுத்தல் வேண்டும்.
குறிப்பு :
யாராவது ஒருவர் அதாவது  சோடியில் ஒருவரை இழக்கும் பட்சத்தில் எஞ்சிய நபர் உணர்வு பூர்வமான மனத்தாக்கத்திற்கு ஆளாகும் போது கிடைக்கக்கூடிய வேறு ஏதாவது அறைக்கு மாற்றப்படுவார். அல்லது வேறு ஒருவருடன் குறித்த அறையை பகிர்ந்து கொள்ளுவார். குறித்த அந்நபர் ஒரு தனியாளாகவே கருதப்படுவார்.
2.    பின்வரும் தொகைக்கு சமமான ஒரு பிணை வைப்பினை வதிவாளர் செலுத்துவதுடன் இந்தத் தொகையானது மருத்துவமனையில் அனுமதித்தல் தேவைப்படும் பட்சத்தில் அவசர வைத்திய சிகிச்சைக்காகவோ அல்லது வதிவாளரினால் உடைமைக்கு அல்லது ஏதேனும் தளபாடத்திற்கு ஏற்படுத்தப்படும் சேதத்திற்கான நட்டஈடாகவோ அமையும். குறித்த தொகையை உத்தரவாதியானவர் உடனடியாகவே செலுத்துதல் வேண்டும்.
      (அ)    நபர் ஒருவருக்கு 10000 (ஒரு இலட்சம்) இலங்கை ரூபாய்
(ஆ)    ஒருசோடி (தம்பதி) அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கான கட்டணம்
      150000 (ஒரு இலட்சத்து ஐம்பதுனாயிரம்)இலங்கை ரூபாய்
குறிப்பு:    மேற்குறித்த பிணைவைப்புத் தொகைக்கு வட்டிக் கொடுப்பனவு இல்லாதலையும்
         பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் மீளக் கொடுக்கற்பாலனதாகவும் அமையும்.
(அ)    பிணைவைப்பு தொகையானது ('பூஜா அகத்தின்' வதிவாளர் தங்கியிருக்கும் கால அளவு கருத்தில் கொள்ளாது)
      வதிவாளர் இறக்கும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பப் படிவத்தில் காணப்படும் பெயர் குறிப்பிடப்படும் நபருக்கு குறித்த
      இறப்பு ஏற்பட்டு 1 மாதத்தின் பின்னர் 100மூ மீளக் கொடுக்கப்படற் கூடியதாகும்.
(ஆ)    ஒரு வதிவாளர் ஒரு வருட காலம் அல்லது அதற்குக் கூடுதலான காலம் 'பூஜா அகத்தில்' தங்கியிருந்து தனது
      சுயவிருப்பத்தின் பேரில் விலகிச் செல்வாராயின் 'பூஜா அகத்தைவிட்டு அவர் விலகிச் சென்ற 1 மாதத்தின்
      பின்னர் குறித்த பிணை வைப்புத் தொகையில் 90மூ அவருக்கு மீளச் செலுத்தப்படும்.
(இ)    'பூஜா அகத்தின்' 1 வருட காலம் முழுமையாக தங்கியிருக்காமல் அதற்கு முன்னரேயே அவர் தனது
      சுயவிருப்பின் பேரில் விலகிச் செல்வாராயின் 'பூஜா அகத்தை' விட்டு விலகிச் சென்ற 1 மாதத்தின் பின்னர்
      வதிவாளருக்கு பிணை வைப்புத் தொகையில் 75மூ மீளச் செலுத்தப்படும்.
(ஈ)    ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வதிவாளர் துர்நடத்தைக்காகவோ அல்லது வேறு ஏதெனும் செயலை
      செய்தமை, செய்யத் தவறியமை என நிர்வாகக் குழுவினால் கடமையானதென கருதப்படும் செயற்பாட்டுக்காக
      'பூஜா அகத்தை' விட்டு வெளிச் செல்ல வேண்டும் என கேட்கப்படும் பட்சத்தில் வதிவாளர் தங்கியிருந்த
      காலத்தைக் கருத்தில் கொள்ளாமலே வெளிச் சென்ற நாளிலிருந்து 1 மாத காலத்திற்குள் பிணைப் பணத்தின்
      75மூ அவருக்கு திருப்பிச் செலுத்தப்படும். மேற்குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் வதிவாளரினால்
      செலுத்தப்படாத ஏதெனும் தொகையிருப்பின் அவை மீளச் செலுத்தப்பட வேண்டிய தொகையில் இருந்து கழித்துக்
      கொள்ளப்படும்.

   

Contact us  

Head Office +41798926219(Switzerland)
Local: (+94)026-2050440 Mobile: (+94) 0777955638
613A Shakthilane,Anpuvalipuram, Trincomalee.
www.poojahaham.com
e-mail : administrator@poojahaham.com

   

Application Form